பண்ருட்டி அருகே தாயை தாங்கிய மகன் கைது

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கணபதி இவரது மனைவி ஜெயபிருந்தா இந்த தம்பதியின் மகன் பெருமாள் இவர் தனது தாய் ஜெயபிருந்தாவிடம் சொத்து பிரித்து தரும்படி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக தகராறு நடந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பெருமாள் ஜெயபிருந்தாவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி