சேத்தியாத்தோப்பு அடுத்த சென்னிநத்தம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த வடலூரைச் சேர்ந்த அன்பு ரோஸ் மகன் ஜெயராஜ் (40) என்பவர், திருமணம் ஆகாததால் மனமுடைந்து வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயராஜின் அண்ணன் சாம்சன் துரை ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.