நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பின் தந்தையும், சமூக நீதியின் தந்தையுமான புரட்சியாளர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளான நேற்று தமிழக அரசு தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமத்துவ நாளாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் சமூகநீதியை நிலைநிறுத்தவும்,
சமத்துவத்தின் கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாகவும் நெல்லிக்குப்பம் நகராட்சி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணலின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும், தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் சமூக நீதி, சமத்துவம், கல்வி, ஒடுக்கு முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட அம்பேத்கரின் கொள்கைகளை நினைவுகூறும் வகையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேலாளர் சரவணன், கணக்கர் செந்தில் குமார், இளநிலை உதவியாளர் பாபு, உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி