பண்ருட்டி: இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூரைச் சேர்ந்த வனிதா(30) நேற்று முன்தினம் (டிசம்பர் 2) அதிகாலை தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். கணவர் ராஜா மற்றும் உறவினர்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி