பண்ருட்டி: மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த குரு என்பவர் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன்குட்டையில் டைல்ஸ் விற்பனை ஷோரூம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தர பிரதேசம் மாநிலம் பொராக்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேஷாந்த் (44) என்பவர், மின்கசிவு காரணமாக சுவரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி