கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எம். புதுப்பாளையத்தில் சாலையில் நடந்து சென்ற ராதா(50) என்பவரிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி ஒன்றரை சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ராதா புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.