புதுச்சேரி மாநிலம் சொர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சிவகுமார் (50) என்பவர், புதன் நள்ளிரவு பண்ருட்டியில் இருந்து சொந்த ஊருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பனப்பாக்கம் சாலையில் போக்குவரத்து வேகக் கட்டுப்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி, தலையில் பலத்த காயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுப்பேட்டை போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.