காஞ்சிபுரத்தில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து, பள்ளி மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிடவும், அவருக்கு உரிய கவுன்சிலிங் சிகிச்சை அளித்து தொடர்ந்து அச்சிறுமி கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.