பண்ருட்டி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் கோயில் நில ஆக்கிரமிப்பு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ கடுமையாகக் கண்டித்துள்ளார். உதவி ஆணையர் இலட்சுமி மற்றும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோயில் காவலர்களின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, பக்தர்கள், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி