பண்ருட்டி: சிறுமிக்கு திருமணம் - வாலிபர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (30), 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது 4 மாத கர்ப்பிணியான சிறுமி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி