பண்ருட்டி: ரகளையில் ஈடுபட்டவர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு வடக்கு தெரு சேர்ந்த பால்ராஜ் மகன் பார்த்திபன் கடந்த 9ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ரைஸ் மில் பேருந்து நிறுத்தம் அருகில் மதுபோதையில் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டியும் அச்சுறுத்தியும் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சென்று அப்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி