பண்ருட்டி: முந்திரி தோப்பில் ஆண் பிணம்

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பம் -கொள்ளுக்காரன்குட்டை சாலையோரத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் விருத்தாசலம் அருகே விராட்டிக்குப்பத்தைச் சேர்ந்த முனியன் என்பது தெரிந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் முனியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி