கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று 2 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் திமுகவினர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.