பண்ருட்டியில், திருமணமான 4 மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு இளம் பெண் விஜித்ரா (22) துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள நகைகள், கார் சீர்வரிசையாக கொடுத்தும், கணவர் விஜய் (31), அவரது தந்தை பழனிசாமி, தாய் வசந்தி, உறவினர்கள் 2 பேர் சேர்ந்து விஜித்ராவை ஆபாசமாக திட்டி, கூடுதலாக 10 பவுன் நகை, ரூ. 5 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விஜித்ரா அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.