பண்ருட்டி: சிறுமி 2 மாத கர்ப்பம்..மாணவர் மீது பாய்ந்த வழக்கு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் முள்ளிகிராமப்பட்டை சேர்ந்த ராஜ்குமார் மகன் சசிகுமார் இவர் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். சசிகுமார் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியிடம் பழகி வந்ததாகத் தெரிகிறது. 

இந்த நிலையில் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் மாணவர் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி