பண்ருட்டி: விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் P.N. இராஜா அறிவுரையின்படி பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரமேஷ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளர்கள் முரளி மற்றும் செந்தில்குமார் தலைமையில் பண்ருட்டி SPDR திருமண மண்டபத்தில் பண்ருட்டி நகர ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றியும், பண்ருட்டி நகர பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்தவும், சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்கவும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க அறிவுறுத்தியும் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி