பண்ருட்டி: விபத்தில் 4 பேர் காயம்

பண்ருட்டி அருகே சேமகோட்டையைச் சேர்ந்த சிவபாலன், தனது மனைவி, தாய், மகள் மற்றும் உறவினருடன் நேற்று முன்தினம் கடலூரில் நடைபெற்ற மாசி மக விழாவிற்கு ஆட்டோவில் சென்றார். விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி