கடலூர்: தலையில் கத்தியால் குத்து; 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்.என்.புரம் புதுநகரை சேர்ந்த தொழிலாளி ராஜேஷ்க்கும் அதே பகுதியை சேர்ந்த அன்பு மற்றும் ஜவகர் ஆகியோருக்கும் இடையே கூலி பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜேஷ் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அன்பு, ஜவகர் உள்பட 4 பேர் திடீரென ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ராஜேஷின் தலையில் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பு மற்றும் ஜவகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி