நெல்லிக்குப்பம்: தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த தீனதயாளன் தொழிலாளி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்ற போது அவரை உறவினர்கள் அங்கிருந்து செல்லுமாறு அனுப்பிய போது திடீரென தீனதயாளன் தவறி கீழே விழுந்தார். 

இதில் தலையில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பழனிவேல் என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் கோமாவில் இருந்து வந்த தீனதயாளன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதனால் நெல்லிக்குப்பம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றுவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி