கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் போதை பொருட்கள் சோதனை செய்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜன், துப்புரவு ஆய்வாளர் கேசவன் ஆகியோர் நகர பகுதியில் 50 ற்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடியாக சோதனை செய்ததில் ஒரு கடையில் மட்டும் விற்பனைக்கு வைத்திருந்த 10 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.