இந்த நிலையில் வீட்டுக்குள் ஒரு நபர் வந்து சென்றது போன்று கிறிஸ்தவராஜனுக்குத் தெரிந்தது. இதனால் அவர் பீரோ இருந்த அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை.
இதுகுறித்து அவர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோ சாவியை எடுத்துத் திறந்து நகை பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.