நெல்லிக்குப்பம்: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி. என். பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (29) என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அன்றிரவு மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி