நெல்லிக்குப்பம்: சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குணமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை (48) மற்றும் அவரது நண்பர் சத்தியமூர்த்தி (30) ஆகியோர் பண்ருட்டியில் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அழகியநத்தம் அருகே எதிரே வந்த கோவிந்தராஜ் ஓட்டி வந்த பைக் மோதியதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி மற்றும் கோவிந்தராஜ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி