நடுவீரப்பட்டு: குவாரியில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

நடுவீரப்பட்டு அருகே பெத்தாங்குப்பம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வராணி (50) என்பவர், சி.என். பாளையம் வைத்திலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கல் குவாரியில் மண் சலிக்கும் வேலை செய்து வந்தார். ஞாயிறு மாலை வேலை செய்யும் போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி