நடுவீரப்பட்டு: வீடு புகுந்து செயின் திருட்டு

நடுவீரப்பட்டு அருகே மூலக்குப்பம் தெற்கு தெருவில் வசிக்கும் மணிகண்டன், அவரது மனைவி மாலா (30) ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். மாலா வீட்டினுள்ளும், மணிகண்டன் புழுக்கமாக இருந்ததால் வீட்டு வாசலிலும் படுத்திருந்தார். அதிகாலையில் எழுந்த மணிகண்டன், மாலாவின் கழுத்தில் இருந்த சுமார் 30 கிராம் தாலிசரடு, தாலி, குண்டு உள்ளிட்ட நகைகள் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி