காடாம்புலியூர் அடுத்த பி. ஆண்டிகுப்பத்தை சேர்ந்த வீரமுத்துவின் மகன்களான சக்திவேல் (52) மற்றும் காசிவேல் என்கிற செல்வக்கண்ணு (46) இடையே பொதுப்பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக காசிவேல், தனது அண்ணன் சக்திவேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, காசிவேலை கைது செய்துள்ளனர்.