உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் - வேல்முருகன்

பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ மற்றும் தவாக தலைவர் வேல்முருகன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், மாநில உரிமைகளை கைவிடும் உயர்கல்வி அமைச்சரின் கூற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியிருப்பது, மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி