பண்ருட்டி: மகள் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தந்தை உயிரிழப்பு

பண்ருட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது மனைவி பரிமளாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், பரிமளா மகள் வீட்டிற்கு கோபித்துக்கொண்டு சென்றார். மனைவியை அழைத்து வர மகள் வீட்டிற்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி, பரிமளா வர மறுத்ததால் அங்கு பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து புதுப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி