கடலூர் எஸ்.பி. எஸ். ஜெயக்குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேல்கவரப்பட்டு அருகே வாகன விபத்தில் காயமடைந்த கோகுல்நாதன் மற்றும் ஷர்மா ஆகியோருக்கு முதலுதவி அளித்து, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி, காவலர்களின் உதவியுடன் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து, காலதாமதமின்றி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.