கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுபாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். 2020 இல் நடந்த இந்த கொலை வழக்கில், தேர்தல் முன்விரோதம் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் ஒருவர் உயிரிழக்க, ஒருவரை விடுதலை செய்து, மீதமுள்ள 10 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.