கடலூர் மாவட்டம், குடிகாடு ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (20.11.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு, வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணிகளின் முக்கியத்துவத்தையும், அதன் துல்லியத்தையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.