பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ மற்றும் தவாக தலைவர் வேல்முருகன் நேற்று (மே 27) வெளியிட்ட அறிக்கையில், தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வாடகை கேட்டதால் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் சட்டம் ஒழுங்கைக் காக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு, அதைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.