கடலூர் அருகே வாழைத்தார் விலை கடுமையாக உயர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, குள்ளஞ்சாவடி, நடுவீரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழைத்தார் மற்றும் வாழைமரம் விலை அதிகரித்து காணப்படுகிறது.

இன்று(செப்.15) மற்றும் நாளை(செப்.16) ஆவணி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு வாழை மரம் 500 ரூபாய்க்கும், ஒரு வாழைத்தார் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் மக்கள் தேவையான பழங்கள் மற்றும் மரங்களை வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி