கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு பஞ்சவர்ணம் நகரில், ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை நேற்று (பிப்.23) பண்ருட்டி நகர்மன்ற தலைவர் இராஜேந்திரன் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.