வடலூர்: பெண் கொன்று புதைப்பு.. கள்ளக்காதலன் கைது

நெய்வேலி செல்லும் சாலையில், கண்ணுதோப்பு பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் வடலூர் சர்வோதயா நகர் கண்ணன் மனைவி மஞ்சுளா (38) என அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், மஞ்சுளாவின் கள்ளக்காதலன் சேப்ளாநத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சம்பத் (39) என்பவரே மஞ்சுளாவை கொடூரமாக கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் சம்பத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி