வடலூர்: அரசு போக்குவரத்து பணிமனையில் திருட்டு

வடலூரில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் இரவுப் பணியாளர் குமார் மர்ம நபர்களின் நடமாட்டத்தைக் கண்டுள்ளார். அவர் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் மதில் சுவர் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், பணிமனைப் பகுதியில் இருந்த செல்ப் மோட்டார், ஆல்டர்நேட்டர், வால்வுடோர் ஆகிய உதிரி பாகங்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி