வடலூர்: கார் கண்ணாடி உடைப்பு.. 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்த வடிவேல், வடலூர் வார சந்தைக்கு வந்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெய்வேலி ரோட்டில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்து, மெதுவாக செல்லாதது ஏன் என்று கூறி திட்டி தாக்கியுள்ளனர். மேலும், காரின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து வடலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி