குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சோபுரம் ஊராட்சியில் அருவாள் மூக்கு திட்டம் நிறைவுற்ற பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உடனிருந்தனர். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.