கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, கொலை முயற்சி, திருட்டு, சண்டை வழக்குகள் என 20 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வீரமணி(26) என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதால் போலீசார் கைது செய்தனர். நெய்வேலி நகர சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் அவரை எச்சரித்தும் ரகளை செய்ததால், வழக்கு பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.