மந்தாரக்குப்பம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லையில் மின்தடை

நெய்வேலி, கடலூர் மாவட்டங்களில் இன்று (நவ. 13) மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மந்தாரக்குப்பம் துணை மின் நிலையத்தில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரையிலும், குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரையிலும், தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரையிலும் மின்தடை நீடிக்கும். இதனால் வடக்கு சேப்ளாநத்தம், தெற்கு சேப்ளாநத்தம், காமராஜ் நகர், குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ். புதூர், வள்ளுவர் காலனி, அகரம், பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, திம்மராவுத்தன்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, காட்டுரெங்கநாதபுரம், தையல் குணாம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி