குறிஞ்சிப்பாடி, நெய்வேலி பகுதியில் நாளை மின்தடை

குறிஞ்சிப்பாடி மற்றும் சேப்ளாநத்தம் துணை மின் நிலையங்களில் நாளை (15 ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு. நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னிதமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூர்அகரம், வரதராஜன்பேட்டை, ஆடூர்குப்பம், கண்ணாடி, கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லுார், பூதம்பாடி, கீழ்பாதி, மேல்பாதி ஆகிய பகுதிகளிலும், நெய்வேலி, கங்கைகொண்டான், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், உய்யாகொண்டராவி, சேப்ளாநத்தம், கீழக்குப்பம், கோட்டகம், பார்வதிபுரம், ஜோதி நகர், வள்ளலார் நகர், ஆர்சி தெரு, நடேசன் நகர், கோட்டக்கரை, சிட்கோ பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி