அவரை அங்கு பணியில் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் தூக்கி சாலையோரத்தில் வைத்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த சிவசங்கரனின் உறவினா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அம்மேரி ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினா். நிகழ்விடத்துக்கு வந்த நெய்வேலி தொ்மல் காவல் துறையினர் மற்றும் என்எல்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். காவல் துறையினர் சிவசங்கரனின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து நெய்வேலி தொ்மல் காவல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.