நெய்வேலி: மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அசோக் நகரைச் சேர்ந்த சங்கர் (45), நெய்வேலி வடக்குத்தில் உள்ள ஹோட்டலில் மேலாளராகப் பணிபுரிகிறார். ஹோட்டல் முன்பு காரை நிறுத்திய வடக்கு மேலூரைச் சேர்ந்த குமரவேல் (39) என்பவரிடம் காரை ஓரமாக நிறுத்துமாறு சங்கர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமரவேல், சங்கரை அசிங்கமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நெய்வேலி போலீஸார் குமரவேலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி