நெய்வேலி: பள்ளி மாணவன் காயம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி 2வது வட்டம் டி.எம்.எஸ். மணி சாலையை சேர்ந்த 17 வயது மாணவர் தனது நண்பரான நெய்வேலி அடுத்த வடக்குத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவரை இருசக்கர வாகனத்தை அழைத்துக் கொண்டு தனியார் பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, 9வது வட்டம் பாரதி சாலை வழியாக வந்த போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் மாணவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இதில் பின்னால் அமர்ந்துவந்த வடக்குத்தூர் பகுதி மாணவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இருசக்கர வாகனம் ஓட்டிவந்த மாணவர் காயமின்றி தப்பினார். இந்த விபத்து குறித்து நெய்வேலி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி