கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25 சதுரக்க வீதியைச் சேர்ந்த 13 வயது மாணவன் அஸ்வின், தனியார் ஆண்கள் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி ஆய்வகத்தில் பொருட்கள் உடைந்ததால், அவனது பெற்றோரை வரவழைத்து ஆசிரியர்கள் மாணவனை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.