நெய்வேலி அடுத்த மேல் வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த ரவுடி வீரமணி (26), கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட 20 வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாளுடன் நின்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி பொதுமக்களை மிரட்டியுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.