நெய்வேலி: 2 பேரை தாக்கி பணம் பறிப்பு.. ரவுடி கைது

நெய்வேலி 21வது வட்டத்தைச் சேர்ந்த சூர்யா (22) மற்றும் அவரது உறவினர் மகன் பள்ளிக்கூடம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, 30வது வட்டத்தைச் சேர்ந்த ரவுடி பரசுராமன் (21) மற்றும் கவுலத்மணி ஆகியோர் அவர்களை வழிமறித்து, திட்டி தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி, சூர்யாவின் சட்டைப் பையில் இருந்த ரூ. 2 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பரசுராமன் கைது செய்யப்பட்டார். கவுலத்மணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி