நெய்வேலி: வாலிபரை தாக்கியவர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 3 ஐ சேர்ந்த ஜோசப் மகன் ஜான்சன் இவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த அஜய் கிருஷ்ணன் என்பவர் ஜான்சனிடம் மது வாங்க பணம் கேட்டார். ஜான்சன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜய் கிருஷ்ணன் பீர் பாட்டிலால் ஜான்சனை தாக்கினார். புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிந்து அஜய் கிருஷ்ணனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி