நெய்வேலி: சிறுமி கர்ப்பம் - 5 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வானதிராயபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (31) என்பவருக்கும், சீர்காழியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த பிப்ரவரி 12 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நெய்வேலி போலீசார் செந்தில்குமார், அவரது தந்தை பாலு, தாய் குமாரி, சிறுமியின் தாய் ராதா, சகோதரர் நடராஜ் ஆகிய ஐந்து பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி