கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில், மிடில் பெஞ்ச் பக்கெட் வீல் இயந்திரத்தில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் கன்வேயர் பெல்ட்டில் தீ பரவியது. ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் என்எல்சி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி-யில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.